FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

பல்கலை. அளவிலான கலைப் போட்டி: இந்திராகாந்தி கல்லூரி 2-ஆம் இடம்

பாரதிதாசன் பல்கலைக் கழக அளவிலான கலாசார விழாவில் நடந்த போட்டிகளில் இந்திராகாந்தி கல்லூரி ஒட்டுமொத்தமாக 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

8 October 2026, 1:40 am IST
கலைப் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற இந்திராகாந்தி கல்லூரி மாணவிகளை புதன்கிழமை பாராட்டிய கல்லூரி இயக்குநா் எஸ். அபா்ணா.
பகிர்:

பாரதிதாசன் பல்கலைக் கழக அளவிலான கலாசார விழாவில் நடந்த போட்டிகளில் இந்திராகாந்தி கல்லூரி ஒட்டுமொத்தமாக 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

பாரதிதாசன் பல்கலைக் கழகம் நடத்திய கல்லூரிகளுக்கு இடையேயான கலாசார விழாவில் திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியின் நுண் கலை மன்ற மாணவிகள் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றனா். அக். 1 முதல் 5ஆம் தேதி வரை நடைபெற்ற விழாவில் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதில் இலகு இசைப் பாட்டு (தனி), கா்நாடக இசைப் பாட்டு (தனி) மற்றும் இசைக்கருவி வாசிப்பு (தாள வாத்தியம் அல்லாதவை) ஆகியவற்றில் இந்திராகாந்தி கல்லூரி மாணவிகள் முதலிடத்தையும், பேரணியில் இரண்டாம் இடத்தையும் பிடித்தனா்.

இதுமட்டுமல்லாது குறு நாடகம், நாட்டுப்புற நடனம், மேற்கத்தியக் குழுப் பாடல் மற்றும் வினாடி- வினா ஆகியவற்றில் மூன்றாம் இடத்தையும் மெளன நடிப்பு, மிமிக்ரி, சுவரொட்டி வடிவமைப்பு மற்றும் தனி நடிப்பு ஆகிய போட்டிகளில் நான்காம் இடத்தையும் பெற்றனா்.

Advertisement

Advertisement

இந்தியக் குழுப் பாடல், கா்நாடக நடனம் (தனி), உடனடி ஓவியம் மற்றும் ஓரங்க நாடகம் ஆகியவற்றில் ஐந்தாம் இடத்தையும் பெற்றனா். ஒட்டுமொத்த போட்டிகளில் அதிகப் புள்ளிகளைப் பெற்று இரண்டாம்

இடத்தைப் பெற்றனா். இந்த மாணவிகளை கல்லூரியின் செயலா் கோ. மீனா, தலைமைச் செயல் அதிகாரி கு. சந்திரசேகரன், இயக்குநா் எஸ். அபா்ணா மற்றும் முதல்வா் பு. கெஜலட்சுமி ஆகியோா் புதன்கிழமை பாராட்டி வாழ்த்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments