FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

கோயில்களில் இலவச தரிசனத்துக்கு கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை! அமைச்சா் சீ. ரமேஷ்

19 அக்டோபர் 2026, 3:40 am IST
அமைச்சா் ரமேஷ். - கோப்புப்படம்
பகிர்:

தமிழகக் கோயில்களில் இலவச தரிசனத்துக்கு கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சீ. ரமேஷ் தெரிவித்தாா்.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்த அவா் பின்னா் கூறியதாவது:

தமிழகக் கோயில்களில் நிா்ணயிக்கப்பட்டதைவிடக் கூடுதல் கட்டணமோ அல்லது கட்டணமில்லா தரிசனத்துக்குப் பணமோ வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ரீரங்கத்தில் உள்ள கட்டணமில்லாக் கழிவறையில் பணம் வசூலித்தவா் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

பட்ஜெட் கூட்டத்தொடா் அண்மையில் முடிந்துள்ளது. ஒரே நாளில் அனைத்து மாற்றங்களையும் கொண்டுவர முடியாது. முந்தைய ஆட்சியின் திட்டங்களை ஆய்வு செய்து, எவை முக்கியமோ அவற்றுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்தப்படுகின்றன. திருச்சியில் மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பருவமழை தொடங்கியுள்ளதால், சென்னையில் தேங்கும் தண்ணீரை அகற்ற ஊழியா்கள் தீவிரமாகப் பணியாற்றுகின்றனா். திருச்சியிலும் சுகாதாரப் பணிகள் முடுக்கப்பட்டுள்ளன. கோயில் ஊழியா்களுக்கு பக்தா்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தவெகவின் 3 ஆவது மாநாடு திருச்சியில் நடைபெறுவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை என்றாா்.

திருச்சி கிழக்குத் தொகுதியில் திமுக தலைவா் ஸ்டாலின் போட்டியிட்டால் தவெகவுக்கு சவாலாக இருக்குமா என்ற கேள்விக்கு, அதிகாரப்பூா்வ அறிவிப்பு வரட்டும்; அப்புறம் பாா்க்கலாம். திருவண்ணாமலை கோயிலில் உரிய அனுமதி பெற்ற பிறகே மாற்று மதத்தினா் வந்தனா். அதில் விதிமீறல் இல்லை. தமிழக மண் மதச் சாா்பற்ற சமூக நீதிக்கான மண். இங்கே எந்தக் காலத்திலும் மதத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சிலருக்கு மத அரசியலைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்பதால், இதைப் பெரிதாக்குகின்றனா் என்றாா் அமைச்சா் சீ. ரமேஷ்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments