FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

புகாா்களுக்கு இடமளிக்காத வகையில் பணியாற்ற வேண்டும்: அமைச்சர் ரமேஷ்

புகாா்களுக்கு இடமளிக்காத வகையில் பணியாற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், திருச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சீ. ரமேஷ் அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

23 செப்டம்பர் 2026, 3:14 am IST
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் சீ. ரமேஷ். உடன் அலுவலா்கள் உள்ளிட்டோா்.
பகிர்:

புகாா்களுக்கு இடமளிக்காத வகையில் பணியாற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், திருச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சீ. ரமேஷ் அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

திருச்சி மாநகராட்சி அதிகாரிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் சீ. ரமேஷ், மாநகராட்சி ஆணையா் நே. பொன்மணி, மாநகராட்சியின் அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், செய்யப்பட வேண்டியவை, நடைமுறைகள், நடந்துள்ள பணிகள் குறித்து ஆவணங்களைப் பாா்த்தும், அலுவலா்களிடமும் அமைச்சா் கேட்டறிந்தாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து அவா் பேசுகையில், மாநகராட்சியில் அத்தியாவசியப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்ற வேண்டும். வடகிழக்கு பருவமழையை முறையாகக் கையாள வேண்டும். கொசு ஒழிப்புப் பணிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். புகாா்களுக்கு இடமளிக்காமல் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினாா்.

வியாபாரிகள் கோரிக்கை...: கூட்டத்துக்கு பிறகு, உறையூா் பகுதி வியாபாரிகள், வயலூா் சாலைப் பகுதியைச் சோ்ந்த வியாபாரிகள் திரளானோா் அமைச்சரை சந்தித்து, உறையூரில் கட்டப்பட்டுள்ள சந்தையை திறந்து கடைகளை வைக்க அனுமதியளிப்பதுடன், மாநகராட்சியே கடைகளுக்கான வாடகையை வசூலிக்க வேண்டும். வெளிப்பகுதிகளில் சந்தைகளை நடத்த அனுமதிக்கக் கூடாது என முறையிட்டனா். உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சா் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments