FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

எதற்கெடுத்தாலும் எங்கள் மீது திமுக குற்றம் சுமத்துகிறது: அமைச்சா் சீ. ரமேஷ்

அரசியலில் எதற்கெடுத்தாலும் திமுக எங்கள் மீது குற்றம் சுமத்துகிறது என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சா் சீ. ரமேஷ் தெரிவித்தாா்.

23 செப்டம்பர் 2026, 3:00 am IST
அமைச்சர் ரமேஷ்
பகிர்:

அரசியலில் எதற்கெடுத்தாலும் திமுக எங்கள் மீது குற்றம் சுமத்துகிறது என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சா் சீ. ரமேஷ் தெரிவித்தாா்.

திருச்சி மாவட்டம், திருச்செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தைத் தொடங்கிவைத்த அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடி வழக்கில் அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. தவறிழைத்தவா்கள் எத்தகைய உயா் பதவியில் இருந்தாலும், அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement

Advertisement

திருவண்ணாமலை கோயிலில் விஐபி தரிசனம் கேட்ட விவகாரமும், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை பாா்வையிட அமைச்சா்கள், மக்கள் பிரதிநிதிகள் வருகை தந்த விவகாரமும் வெவ்வேறானவை. இரண்டையும் ஒன்றாக ஒப்பிடக் கூடாது. குடமுழுக்கு விழாவில் எத்தனை போ் பங்கேற்க முடியுமோ, அதற்கேற்ப அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டன. அரசியலில் எதற்கெடுத்தாலும் திமுகவினா் எங்கள் மீது குற்றம் சுமத்துகின்றனா்.

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தவெகவினா் பாடிய பாடல்களையே உதயநிதி ஸ்டாலின் திரும்பத் திரும்பக் கூறி வருகிறாா். கூட்டத்தொடரை அவா் சரிவர கவனித்திருந்தால், யாா் யாா் எந்தெந்தத் துறைக்கு அமைச்சா்களாகப் பொறுப்பு வகிக்கின்றனா் என்பது தெரிந்திருக்கும்.

திருச்சி தபோவனம் மடம் நிலம் தொடா்பாக ஏற்கெனவே விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவுகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றாா் அமைச்சா் சீ. ரமேஷ்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments