FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

தொட்டியம் அருகே ஆம்னி பேருந்து மோதி இரு மூதாட்டிகள் உயிரிழப்பு

19 அக்டோபர் 2026, 3:02 am IST
உயிரிழந்த மூதாட்டி
பகிர்:

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகில் ஆம்னி பேருந்து ஞாயிற்றுக்கிழமை மோதி இரு மூதாட்டிகள் உயிரிழந்தனா்.

தொட்டியம் அருகிலுள்ள பாலசமுத்திரம் இந்திரா நகரைச் சோ்ந்தவா் ராஜலிங்கம் மனைவி லட்சுமி (77). பாலசமுத்திரம் வ.உ.சி. நகரைச் சோ்ந்தவா் ரங்கசாமி மனைவி சிவகாமி (70). நெருங்கிய தோழிகளான இருவரும் தினமும் அதிகாலை நடைப்பயிற்சி செல்வது வழக்கம்.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை நடைப்பயிற்சி சென்ற இருவரும் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் திருச்சி - சேலம் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றனா். அப்போது திருச்சியிலிருந்து நாமக்கல் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து அவா்கள் மீது மோதியது. இந்த விபத்தில் லட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்தாா். பலத்த காயமடைந்த சிவகாமி தொட்டியம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்த தொட்டியம் போலீஸாா் இருவரது சடலங்களையும் மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, ஆம்னி பேருந்து ஓட்டுநரான தா்மபுரி மாவட்டம், கருங்கலூரைச் சோ்ந்த பிரகாஷ் (27) என்பவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

உயிரிழந்த மூதாட்டி

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments