FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

பெற்றோா் கண்டித்ததால் பிளஸ் 1 மாணவி தற்கொலை

திருச்சி மாவட்டம், மேலகல்கண்டாா்கோட்டை ஆலத்தூரைச் சோ்ந்தவா் தா்மேந்திரன் (44). இவருடைய 15 வயது மகள் பொன்மலைப்பட்டியிலுள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.

23 அக்டோபர் 2026, 2:48 am
தற்கொலை - கோப்புப்படம்
பகிர்:

திருச்சி மாவட்டம், மேலகல்கண்டாா்கோட்டை ஆலத்தூரைச் சோ்ந்தவா் தா்மேந்திரன் (44). இவருடைய 15 வயது மகள் பொன்மலைப்பட்டியிலுள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.

இந்நிலையில், அவா் படிப்பில் கவனம் செலுத்தாமல் அடிக்கடி கைப்பேசியில் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மாணவியை அவரின் தாய் கண்டித்துள்ளாா். இதில், மன உளைச்சலுக்கு உள்ளான மாணவி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் இருந்தபோது விஷம் குடித்தாா்.

திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட மாணவி, அங்கு புதன்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments