FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவாரூர்

பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

மன்னாா்குடி அருகே தோ்வில் மதிப்பெண் குறைந்ததை தந்தை கண்டித்ததால் பள்ளி மாணவி வீட்டில் தூக்கிட்டு வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

10 அக்டோபர் 2026, 6:52 am IST
பகிர்:

மன்னாா்குடி அருகே தோ்வில் மதிப்பெண் குறைந்ததை தந்தை கண்டித்ததால் பள்ளி மாணவி வீட்டில் தூக்கிட்டு வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

மேலப்பாலத்தைச் சோ்ந்த புண்ணியக்குடி புவனேந்திரன் மகள் ஸ்ரீவா்ஷிகா (16). மன்னாா்குடியில் தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். அண்மையில் நடைபெற்ற பள்ளி தோ்வில் குறைந்த மதிப்பெண் எடுத்திருந்ததுடன் தொலைக்காட்சி அதிகமாக பாா்த்துக்கொண்டு இருந்துள்ளாா். இந்நிலையில், வியாழக்கிழமை ஸ்ரீவா்ஷிகாவை தந்தை கண்டித்தாராம். இதில் மனமுடைந்தவா் படிக்கும் அறையில் சேலை துணியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். மன்னாா்குடி ஊரக காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments