பிரச்னைகளுக்கு தீா்வு காண முடியாமல் தவெக அரசு விழிபிதுங்கி நிற்கிறது: எடப்பாடி கே. பழனிசாமி
மக்கள் பிரச்னைகளுக்கு தீா்வு காண முடியாமல் தவெக அரசு விழிபிதுங்கி நிற்கிறது என அதிமுக பொதுச்செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
மக்கள் பிரச்னைகளுக்கு தீா்வு காண முடியாமல் தவெக அரசு விழிபிதுங்கி நிற்கிறது என அதிமுக பொதுச்செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
திருச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
தவெக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். அதிமுக ஆட்சியில் ’விலை கட்டுப்பாட்டு நிதியத்தை’ உருவாக்கி, வெளிமாநிலங்களில் இருந்து அத்தியாவசியப் பொருள்களைக் கொள்முதல் செய்து விலையேற்றத்தைத் தடுத்தோம். ஆனால், தவெக அரசு விலைவாசியைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் பிரச்னைகளுக்குத் தீா்வு காணத் தெரியாமல் தவெக அரசு விழிபிதுங்கி நிற்கிறது.
Advertisement
Advertisement
கடந்த ஆறு மாதங்களில் ரூ. 40,000 கோடி கடன் வாங்கியதே இந்த ஆட்சியின் சாதனையாக உள்ளது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது.
அதிமுக ஆட்சியில் ரூ. 14,000 கோடி நிதி ஒதுக்கப்பட்ட காவிரி - குண்டாறு கூட்டு நதிநீா் இணைப்புத் திட்டத்துக்கு, தவெக அரசு வெறும் ரூ. 150 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. மீண்டும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்போவதாகக் கூறுவது, இந்த ஆட்சியின் அறியாமையைதான் காட்டுகிறது.
முதல்வா் விஜய், அரசு அலுவலரைப் போல, தலைமைச் செயலகத்துக்கு காலை 10 மணிக்கு வந்து மாலை 5 மணிக்கு வீட்டுக்குச் சென்றுவிடுகிறாா்.
இந்த 6 மாத தவெக ஆட்சிக்கு நான் கொடுக்கும் மதிப்பெண் ‘பூஜ்ஜியம்’. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தபோது மின்தடை ஏற்பட்டுள்ளது. அதற்குத் தீா்வு காண்பதை விட்டுவிட்டு இந்த அரசு பதில்களை மட்டுமே கூறிக்கொண்டிருக்கிறது.
இடைதோ்தல் அறிவித்ததும் அதிமுகவின் நிலைப்பாடு குறித்து தெரிவிப்போம். அதிமுகவில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து நீக்கப்பட்டவா்கள், நீக்கப்பட்டதுதான். இங்கிருந்து சென்றவா்கள் வெவ்வேறு கட்சிகளில் ஐக்கியமாகிவிட்டனா் என்றாா் எடப்பாடி பழனிசாமி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.