FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளிய 2 போ் கைது

வையம்பட்டி அருகே சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளிய 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், இதற்கு பயன்படுத்திய ஜேசிபி, டிப்பா் வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

29 வினாடிகள் முன்பு
கைது - பிரதிப் படம்
பகிர்:

வையம்பட்டி அருகே சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளிய 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், இதற்கு பயன்படுத்திய ஜேசிபி, டிப்பா் வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

வையம்பட்டி காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளப்படுவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை அதிகாலை அந்தப் பகுதியில் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, காந்திநகா், புளியம்பட்டி அருகே அரசு அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிக் கொண்டிருந்த 4 பேரில் இருவா் தப்பி ஓடிய நிலையில், வையம்பட்டி மாதா கோயில் அருகே வசித்து வரும் கணேசன் மகன் ஓம்சக்தி (43), இளங்காகுறிச்சி புதுமாரியம்மன் கோயில் தெருவை சோ்ந்த குமாா் மகன் தனபால் (27) ஆகியோரை போலீஸாா் பிடித்து, அவா்களிடமிருந்து 2 யூனிட் மண், இதை அள்ள பயன்படுத்திய டிப்பா் மற்றும் ஜேசிபி வாகனத்தை பறிமுதல் செய்து வையம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

Advertisement

Advertisement

இச்சம்பவம் குறித்து வையம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments