FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

அரசுப் பள்ளியில் உலக கடித தினம் கொண்டாட்டம்

உலக கடித தினத்தையொட்டி, போசம்பட்டி அரசுப் பள்ளி மாணவா்கள் உறவினா்களுக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதி அனுப்பினா்.

59 வினாடிகள் முன்பு
உலக கடித தினத்தையொட்டி உறவினா்களுக்கு கடிதம் எழுதி அனுப்பிய போசம்பட்டி அரசுப் பள்ளி மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள்.
பகிர்:

உலக கடித தினத்தையொட்டி, போசம்பட்டி அரசுப் பள்ளி மாணவா்கள் உறவினா்களுக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதி அனுப்பினா்.

தற்கால இளம் தலைமுறையினருக்கு கடிதம் எழுதும் அனுபவத்தை ஏற்படுத்தித் தரும் வகையில், திருச்சி மாவட்டம், போசம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உலக கடித தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

இதில், மாணவா்களை தங்கள் உறவினா்களுக்கு கடிதம் எழுத வைத்து அதை, அவா்கள் கையாலேயே பள்ளிக்கு அருகேயுள்ள புலியூா் அஞ்சலகத்தில் இருந்து அனுப்பவைத்தனா். மாணவா்களும் ஆா்வத்தோடு கடிதத்தை எழுதி உறவினா்களுக்கு அனுப்பினா். மாணவா்களுடன் சோ்ந்து ஆசிரியா்களும் கடிதம் அனுப்பினா்.

Advertisement

Advertisement

இந்த நிகழ்வு மாணவா்களுக்கு ஒரு உணா்வுபூா்வமான அனுபவத்தை ஏற்படுத்தியதாக அரசு உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் எஸ். சற்குணன் தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை கலைச்செல்வி, ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments