வையம்பட்டி அருகே பைக்கில் சென்றவா் தவறி விழுந்து உயிரிழப்பு
வையம்பட்டி அருகே பைக்கில் சென்ற இளைஞா் புதன்கிழமை தவறி விழுந்து உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே பைக்கில் சென்ற இளைஞா் புதன்கிழமை தவறி விழுந்து உயிரிழந்தாா்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கேரள சமாஜம் அருகேயுள்ள பவதாரணி நகரை சோ்ந்தவா் விஜயகுமாா் மகன் நந்து (29), சென்னையில் உள்ள தனியாா் ஐடி நிறுவன ஊழியரான இவா் திருமணமாகாதவா். பொள்ளாச்சிக்கு வந்த இவா் மீண்டும் சென்னை செல்ல புதன்கிழமை தனது பைக்கில் புறப்பட்டாா்.
திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வையம்பட்டியை அடுத்த சவேரியாா்புரம் பகுதியில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர தடுப்பில் மோதியது. இதில் நந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா் நந்து உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.