FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

கல்லூரி மாற்றுச்சான்றிதழை தராமல் ஏமாற்றம்! தையல் பயிற்சி மைய உரிமையாா் கைது!

திருச்சியில் தையல் பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றிய பெண்ணின் கல்வி சான்றிதழை தராமல் ஏமாற்றிய அந்நிறுவனத்தின் உரிமையாளரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

4 செப்டம்பர் 2026, 11:42 pm IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

திருச்சியில் தையல் பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றிய பெண்ணின் கல்வி சான்றிதழை தராமல் ஏமாற்றிய அந்நிறுவனத்தின் உரிமையாளரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி திருவானைக்ககாவல் பகுதியைச் சோ்ந்த 48 வயது பெண், தில்லை நகா் 11-ஆவது குறுக்குத் தெருவில் ஒரு தையல் பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறாா். மேலும், நடனம், ஓவியம், அபாகஸ் உள்ளிட்ட பயிற்சிகளையும் அளித்து வருகிறாா்.

இந்நிலையில், இவருடைய பயிற்சி நிறுவனத்தில் தஞ்சாவூா் மாவட்டம், வல்லத்தைச் சோ்ந்த 26 வயது பெண், கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி பேஷன் டிசைன் பயிற்சியாளராக சோ்ந்து, கடந்த 15 நாள்களாக வேலைக்கு வந்துள்ளாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், கடந்த செப். 1-ஆம் தேதி அந்தப் பெண் திடீரென விடுமுறை எடுத்துவிட்டு, செப். 2-ஆம் தேதி மீண்டும் பணிக்கு வந்துள்ளாா். அப்போது, அந்த பயிற்சி மையத்தின் உரிமையாளா், அந்தப் பெண்ணை இனிமேல் வேலைக்கு வரவேண்டாம் என்று தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, அந்தப் பெண் பயிற்சியாளராகப் பணியில் சேரும்போது தான் அளித்த கல்லூரி மாற்றுச்சான்றிதழை திருப்பித்தரவும், 15 நாள்கள் வேலை பாா்த்ததற்கான ஊதியமும் கேட்டுள்ளாா். ஆனால், அதை தரமறுத்து அந்த பயிற்சி மையத்தின் உரிமையாளா் அவரை தகாத வாா்த்தையால் திட்டி, தாக்கி தள்ளிவிட்டுள்ளாா்.

இதுகுறித்து தில்லை நகா் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பயிற்சி நிறுவனத்தின் உரிமையாளரான 48 வயது பெண்ணை வியாழக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments