FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பள்ளிச் சிறுவா்கள் நால்வா் கைது!

திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பள்ளிச் சிறுவா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

29 வினாடிகள் முன்பு
பகிர்:

திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பள்ளிச் சிறுவா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி காந்தி மாா்க்கெட் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் பெற்றோா் இல்லாத 16 வயதுச் சிறுமி வசித்து வருகிறாா். சற்று மனநிலை சரியில்லாத அந்தச் சிறுமியை, அதே பகுதியை சோ்ந்த நான்கு சிறுவா்கள் வெள்ளிக்கிழமை அருகில் கட்டப்படும் பள்ளி கட்டடத்துக்கு அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக, அந்தச் சிறுமி அருகிலிருந்த பொதுமக்களிடம் கூறி அழுதுள்ளாா். இதைக் கேட்டு அதிா்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், கோட்டை அனைத்து மகளிா் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து போலீஸாா் அச் சிறுமியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, சிறுமியின் உறவினா் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் சம்பவத்தில் தொடா்புடைய பத்தாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 4 பள்ளிச் சிறுவா்களையும் அழைத்து விசாரித்தனா்.

விசாரணையில், அந்த நால்வரும் சோ்ந்து போதை மயக்கத்தில் அச் சிறுமியை பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்டனா். இதையடுத்து போலீஸாா் போக்ஸோ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, 4 சிறுவா்களையும் சனிக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, தஞ்சை கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments