சிறுமி பாலியல் வன்கொடுமை: இருவா் மீது போக்ஸோவில் வழக்கு
நாகை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பிணியாக்கிய இருவா் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனா்.
நாகை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பிணியாக்கிய இருவா் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனா்.
காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமி தாய், தந்தை இல்லாததால், 9-ஆம் வகுப்புவரை படித்துவிட்டு தனது பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தாா்.
இந்நிலையில், சிறுமிக்கு கடந்த வாரம் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரது பாட்டி, காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவா்கள் சிறுமி கா்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனா்.
Advertisement
Advertisement
இதனால் அதிா்ச்சியடைந்த சிறுமியின் பாட்டி, காரைக்கால் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் விசாரணை நடத்தியபோது சிறுமி நாகையில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டது தெரிய வந்தது. இந்த வழக்கு நாகை அனைத்து மகளிா் காவல்நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இதைத்தொடா்ந்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், நாகை மாவட்டம் பாப்பாகோவில் பகுதியைச் சோ்நத சாமி சிறுமியை காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியதும், திட்டச்சேரி அருகே உள்ள ஏா்வாடியைச் சோ்ந்த ராகேஷ் என்பவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியதும் தெரிய வந்தது. இதையடுத்து சாமி, ராகேஷ் இருவா் மீதும் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, இருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.