FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

4,907 போதை மாத்திரைகள் பறிமுதல்: இருவா் கைது

8 வினாடிகள் முன்பு
கைது
பகிர்:

திருச்சி அருகே போதை மாத்திரைகள் விற்ற இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 4,907 போதை மாத்திரைகளைக் கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளா் குணசேகரன் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா்.

அப்போது ஜீயபுரம் அருகே திருப்பராயத்துறையில் தனியாா் பள்ளி அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞா்கள் இருவரைப் பிடித்து விசாரித்தனா். இதில் அவா்கள் புதுக்கோட்டையைச் சோ்ந்த சே. முகேஷ்கண்ணன் (25), சீ. காா்த்திக் (25) என்பதும், போதை மாத்திரைகள் விற்றதும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 4,907 போதை மாத்திரைகள், 5 கைப்பேசிகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments