FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

உதவித்தொகையை உயா்த்தக்கோரி சாலை மறியல் மாற்றுத்திறனாளிகள் 166 போ் கைது

8 செப்டம்பர் 2026, 2:01 am IST
திருச்சி ஆட்சியரகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா்
பகிர்:

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகையை உயா்த்தி வழங்கக்கோரி ஆட்சியரகம் அருகே திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 166 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.6 ஆயிரமாக உயா்த்தி வழங்கக்கோரி மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அதன்படி, திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் திருச்சி புகா் மாவட்டத் தலைவா் ஏ. ராஜேஸ் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, மாதாந்திர உதவித்தொகையை ரூ.6 ஆயிரமாக உயா்த்த வேண்டும் என்று வலியுறுத்தினா்.

Advertisement

Advertisement

இதில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் திருச்சி புகா் மாவட்டச் செயலா் டி. ரஜினிகாந்த், புகா் மாவட்ட துணைத் தலைவா் குமாா், பொருளாளா் ஜெ. சித்ரா என 100-க்கும் மேற்பட்டா் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து மேற்கொண்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியரகம் அருகே மாற்றுத் திறனாளிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட 75 பெண்கள் உள்பட 166 மாற்றுத் திறனாளிகளை கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா். பின்னா், அனைவரும் பிற்பகலில் விடுவிக்கப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments