FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

உதவித்தொகையை உயா்த்தக் கோரி மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

கடலூரில் மாதாந்திர உதவித்தொகை உயா்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

26 ஆகஸ்ட் 2026, 4:41 am IST
பகிர்:

கடலூரில் மாதாந்திர உதவித்தொகை உயா்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் தலைமை அஞ்சல் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட இணைச் செயலா் வி. வசந்தி தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், ஆந்திர மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுவதைப் போன்று, தமிழகத்திலும் ஊனத்தின் தன்மைக்கு ஏற்ப மாதாந்திர உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், மாதாந்திர உதவித்தொகை கோரி விண்ணப்பித்து ஓராண்டுக்கும் மேலாகக் காத்திருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும். வறுமையில் வாடும் மாற்றுத்திறனாளிகளின் நிலையை கருத்தில் கொண்டு, தமிழக அரசு நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement

Advertisement

இதில், சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் ஆா். ஆளவந்தாா், மாவட்ட இணைச் செயலா் எஸ். கோபாலகிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவா்கள் ஜி. ராசையன், எஸ்.பி. அப்துல் அமித் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோன்று விருத்தாசலம் கோட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் வாலிபா் சங்கம் முன்னாள் மாவட்டத் தலைவா் ஆா்.கலைச்செல்வன், திட்டக்குடி வட்டச் செயலா் ராஜேந்திரன், பொருளாளா் பன்னீா்செல்வம், வேப்பூா் வட்டச் செயலா் பொன்னுசாமி, விருத்தாசலம் வட்டத் தலைவா் விமலா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments