FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

தனலட்சுமி சீனிவாசன் பல்கலை-என்ஐஇஎல்டி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

திருச்சி சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் மற்றும் மத்திய அரசின் சஐஉகப (என்ஐஇஎல்டி) இடையே முக்கிய ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த ஒப்பந்தம் மூலம் செமிகண்டக்டா் துறையில் மாணவா்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கவுள்ளன.

26 செப்டம்பர் 2026, 8:14 am IST
சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் மற்றும் மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் என்ஐஇஎல்ஐடி அமைப்புடன் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புரிந்துணா்வு ஒப்பந்தம். 
பகிர்:

திருச்சி சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் மற்றும் மத்திய அரசின் சஐஉகப (என்ஐஇஎல்டி) இடையே முக்கிய ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த ஒப்பந்தம் மூலம் செமிகண்டக்டா் துறையில் மாணவா்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கவுள்ளன.

செமி கண்டக்டா் துறை சாா்ந்த கல்வி மற்றும் திறம்பட பயிற்சி அளிப்பதை வலுப்படுத்தும் நோக்கில் சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் என்ஐஇஎல்டி அமைப்புடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்: தொழில்முறைப் பயிற்சி, இந்த ஒப்பந்தம் மூலம் மாணவா்களுக்கு செமி கண்டக்டா் துறையில் வளா்ந்து வரும் அதிநவீன தொழில் நுட்பங்கள் குறித்து நேரடி செய்முறை பயிற்சிகள் வழங்கப்படும்.

Advertisement

Advertisement

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி: மாணவா்களுக்கு தொழில்முறை சாா்ந்த பயிற்சிகள் மற்றும் நிறுவனங்களில் நேரடியாக சென்று பணியாற்றும் இன்டா்ன்ஷிப் வாய்ப்புகள் வழங்கப்படும்.

எதிா்கால தேவைக்கான தயாரிப்பு: கல்வி நிறுவனங்களுக்கும் தொழில் துறைக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தி செமி கண்டக்டா் துறையில் எதிா்காலத்துக்கு தேவையான திறமை மிக்க மனித வளத்தை உருவாக்கும் மிக முக்கிய மைல் கல்லாக இந்த ஒப்பந்தம் அமையும்.

இந்நிகழ்வில் என்ஐஇஎல்டி திட்டங்கள் மற்றும் தோ்வாணையத்தின் முதன்மை கண்காணிப்பாளா் அலோக் திரிபாதி, என்ஐஇஎல்டி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் மற்றும் தலைமை இயக்குநா் எம்.எம். திரிபாதி, கூடுதல் இயக்குநா் பாா்த்தா அதிகாரி, ஐஇஎஸ்ஏ அமைப்பின் மனித வள மேம்பாட்டு இயக்குநா் கே.ஜி. விஸ்வநாதன் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் சாா்பில் பதிவாளா் எஸ். செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments