பிளாஸ்டிக் சாலைகள் போடப்படும்: திமுக வேட்பாளர் இரா.ஸ்ரீதரன் உறுதி
திருவண்ணாமலை, அக். 8: திருவண்ணாமலை நகரில் பிளாஸ்டிக் சாலைகள் போட ஏற்பாடு செய்யப்படும் என நகர்மன்றத் தலைவர் பதவிக்கான திமுக வேட்பாளர் இரா.ஸ்ரீதரன் உறுதி கூறினார். திருவண்ணாமலை நகராட்சி 11-வது வார்டில்
திருவண்ணாமலை, அக். 8: திருவண்ணாமலை நகரில் பிளாஸ்டிக் சாலைகள் போட ஏற்பாடு செய்யப்படும் என நகர்மன்றத் தலைவர் பதவிக்கான திமுக வேட்பாளர் இரா.ஸ்ரீதரன் உறுதி கூறினார்.
திருவண்ணாமலை நகராட்சி 11-வது வார்டில் உள்ள பல்வேறு தெருக்களில் கவுன்சிலர் வேட்பாளர் கோமதி குணசேகரனுடன் சென்று அவர் சனிக்கிழமை வாக்கு சேகரித்தார்.
பின்னர் அவர் 12-வது வார்டு பகுதியில் கவுன்சிலர் வேட்பாளர் ராஜாத்தி விஜயராஜுடன் ஆதரவு திரட்டி பேசியது:
Advertisement
Advertisement
திருவண்ணாமலை நகரில் பெரும்பான்மையான சாலைகள் பிளாஸ்டிக் சாலைகளாக மாற்றப்படும். இதில் 70 சதவீதம் தார், 30 சதவீதம் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படும். முதல் கட்டமாக ஏற்கெனவே புதூர் கானாத் தெருவில் உள்ள 9 சாலைகளும் பிளாஸ்டிக் சாலைகளாக மாற்ற அனுமதி தரப்பட்டுள்ளது என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.