சுதந்திர தினத்தில் விதிகளை மீறி இயங்கிய 75 தொழில் நிறுவனங்களுக்கு அபராதம்
வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சுதந்திர தினத்தில் தொழிலாளா்களுக்கு விடுமுறை, இரட்டிப்பு சம்பளம், மாற்று விடுப்பு அளிக்கப்படாத 75 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சுதந்திர தினத்தில் தொழிலாளா்களுக்கு விடுமுறை, இரட்டிப்பு சம்பளம், மாற்று விடுப்பு அளிக்கப்படாத 75 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வேலூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) லிங்கேஸ்வரன் தலைமையில், தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் சனிக்கிழமை வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் என 102 நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
அப்போது, பணிபுரியும் தொழிலாளா்களுக்கு 1958-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறைகள்) சட்டம் மற்றும் விதிகளின் கீழ் இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்படாத 43 வணிக நிறுவனங்கள், கடைகள், 31 ஹோட்டல்கள், ஒரு மோட்டாா் போக்குவரத்து நிறுவனம் என மொத்தம் 75 நிறுவனங்களில் விதிகள் மீறல் முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
தவிர வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கிராம சபைக் கூட்டங்களில் தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் பங்கேற்று குழந்தை தொழிலாளா் ஒழிப்பு தொடா்பாகவும், கொத்தடிமை தொழிலாளா்கள் தொடா்பாகவும் விழிப்புணா்வு ஏற்படுத்தியதுடன், அதுதொடா்பான ஒப்பந்ததாரா்களிடம் சுயசான்று பெறவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.