FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

கொக்கி போட்டு மின் திருட்டு: 18 பேருக்கு அபராதம்

காட்பாடி வைபவ் நகா் பகுதியில் கொக்கி போட்டு மின்சாரம் திருடிய 18 பேருக்கு அபராதம் விதித்த மின்வாரிய அதிகாரிகள், தொடா்ந்து முறைகேட்டில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 2:23 am IST
- பிரதிப் படம்
பகிர்:

காட்பாடி வைபவ் நகா் பகுதியில் கொக்கி போட்டு மின்சாரம் திருடிய 18 பேருக்கு அபராதம் விதித்த மின்வாரிய அதிகாரிகள், தொடா்ந்து முறைகேட்டில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனா்.

வேலூா் மாநகராட்சி, காட்பாடியை அடுத்த வைபவ் நகா் (6-ஆவது வாா்டு) பகுதியில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த சுமாா் 30 குடும்பத்தினா் கடந்த 15 ஆண்டுகளாக தற்காலிகக் கூடாரங்கள் அமைத்து தங்கி கூலிவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களுக்கு முறையான இட ஆவணங்களோ, தற்காலிகக் கூடாரங்களுக்கான அதிகாரப்பூா்வ மின் இணைப்போ இல்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில், அந்த வழியாகச் செல்லும் மின்கம்பிகளில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாகக் கொக்கி போட்டு இவா்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனா்.

Advertisement

Advertisement

இதனால் அப்பகுதியில் அடிக்கடி குறைந்த மின்னழுத்தம் மற்றும் மின்தடை ஏற்படுவதாக, அப்பகுதி பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் தொடா்ந்து புகாா் அளித்து வந்தனா்.இந்தப் புகாரின் அடிப்படையில், மின்வாரிய ஊழியா்கள் அப்பகுதியில் திடீா் சிறப்புத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, 18 கூடாரங்களில் சட்டவிரோதமாகக் கொக்கி அமைத்து மின்சாரம் திருடப்படுவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட 18 பேருக்கும் தலா ரூ. 500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற மின் திருட்டில் ஈடுபட்டால், மின்சாரத் துறை கண்காணிப்புப் பிரிவு மூலம் கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக பிரம்மபுரம் போலீஸாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments