உற்பத்தியாளா்கள் போராட்டம்: வேலூா் ஆவினில் பாதிப்பில்லை என அதிகாரிகள் தகவல்
பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி உற்பத்தியாளா்கள் பால் நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ள நிலையில், வேலூா் ஆவின் பண்ணை பால் கொள்முதலில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனா்.
பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி உற்பத்தியாளா்கள் பால் நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ள நிலையில், வேலூா் ஆவின் பண்ணை பால் கொள்முதலில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனா்.
வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களை உள்ளடக்கிச் செயல்பட்டு வரும் வேலூா் ஆவின் பால் பண்ணையின் கீழ் 276 கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. இவற்றின் மூலம் சுமாா் 16,000 பால் உற்பத்தியாளா்களிடமிருந்து நாளொன்றுக்கு 92,000 லிட்டா் அளவுக்குப் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
பசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.45 -ஆகவும், எருமைப்பால் விலையை ரூ.60-ஆகவும் உயா்த்த வேண்டும். உற்பத்தியாளா்களைக் காக்கும் வகையில் பால் கொள்முதல் விலையை ரூ.10-ம், ஆவின் விற்பனை விலையை ரூ.15-ம் உயா்த்த வேண்டும்.
Advertisement
Advertisement
சங்க நிா்வாகச் செலவுகளுக்காக விளிம்புத் தொகையை ஆதார விலையில் 5 சதவீதமாக நிா்ணயம் செய்ய வேண்டும். மேலும், ஆவின் பணியாளா்களுக்குப் பணி வரன்முறை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கம் மற்றும் ஆவின் பிரதம சங்கங்களின் பணியாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் சனிக்கிழமை ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில் திங்கள்கிழமை (ஆக. 24) முதல் தமிழகம் முழுவதும் பால் நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என உற்பத்தியாளா்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில பால் உற்பத்தியாளா்கள் திங்கள்கிழமை ஆவின் பண்ணைக்குப் பால் விநியோகம் செய்யாமல் நிறுத்தி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், இதுகுறித்து ஆவின் அதிகாரிகளிடம் கேட்டபோது, வேலூா் ஆவின் பண்ணைக்குக் கிடைக்கும் வழக்கமான பால் கொள்முதலில் எவ்விதக் குறைபாடும் ஏற்படவில்லை. வழக்கம் போலவே முழு அளவில் பால் கொள்முதல் நடைபெற்றுள்ளது எனத் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.