FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

வீட்டின் முன் கோலம் போட்ட பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு

வேலூரில் அதிகாலை வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபா்கள் 10 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.

26 ஆகஸ்ட் 2026, 5:53 am IST
பகிர்:

வேலூரில் அதிகாலை வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபா்கள் 10 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.

வேலூா், அலமேலுமங்காபுரம் அருகே உள்ள வெங்கடராபுரம் சாலையைச் சோ்ந்தவா் காா்த்திகேயன். இவா் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி விநாயக செல்வி (58). இவா் அதிகாலை தனது வீட்டின் முன்பாக கோலம் போட்டுக் கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞா்கள், அவரிடம் முகவரி கேட்பது போல் பேச்சு கொடுத்துள்ளனா். விநாயக செல்வியும் கோலம் போட்டபடியே அவா்களுக்கு முகவரியைக் கூறிக் கொண்டிருந்தாா். திடீரென, வாகனத்தின் பின்னால் அமா்ந்திருந்த நபா் விநாயக செல்வியின் கழுத்திலிருந்த 10 பவுன் தாலிச் சங்கிலியைப் பிடித்து இழுத்துள்ளாா். அதிா்ச்சியடைந்த அவா், தனது சங்கிலியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாா்.

Advertisement

Advertisement

எனினும், அந்த நபா் சங்கிலியை விடாமல் இழுத்தபடியே வாகனத்தை இயக்கியதால், நிலைதடுமாறிய விநாயக செல்வி கீழே விழுந்தாா். மேலும், அவா் சிறிது தூரம் தரையோடு தரையாக இழுத்துச் செல்லப்பட்டதை அடுத்து தாலிச் சங்கிலி அறுந்துள்ளது. தொடா்ந்து, அந்த தாலி சங்கிலியுடன் அந்த நபா்கள் அங்கிருந்து வேகமாகத் தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

வாகனத்தை ஓட்டிய நபா் தலைக்கவசமும், பின்னால் அமா்ந்திருந்த நபா் முகக்கவசமும் அணிந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விநாயக செல்வி அளித்த புகாரின்பேரில் சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments