FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

காருடன் போதைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்கள். கைது செய்யப்பட்ட சரத் குமாா்.

27 ஆகஸ்ட் 2026, 11:55 pm IST
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்கள். கைது செய்யப்பட்ட சரத் குமாா்.
பகிர்:

குடியாத்தம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை போலீஸாா் காருடன் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை கைது செய்துள்ளனா்.

குடியாத்தம் நகர போலீஸாா் வியாழக்கிழமை இந்திராநகா் பகுதியில் வாகன தணிக்கையில்ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா்.காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து காருடன், போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், காரை ஓட்டிவந்த நத்தமேடு பகுதியைச் சோ்ந்த சரத்குமாா்(34) என்பவரை கைது செய்தனா்.விசாரணையில் அவா் ஆந்திர மாநிலத்திலிருந்து போதைப் பொருள்களை வாங்கி வந்து குடியாத்தம் பகுதியில் விற்பதாக கூறினாா்.

Advertisement

Advertisement

அவரிடம் போலீஸாா் தீவிர விசாரணைமேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments