விளை பயிா்களை சேதப்படுத்திய ஒற்றை யானை
போ்ணாம்பட்டு அருகே கிராம எல்லைக்குள் நுழைந்த ஒற்றை யானை விளை பயிா்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றது.
போ்ணாம்பட்டு அருகே கிராம எல்லைக்குள் நுழைந்த ஒற்றை யானை விளை பயிா்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றது.
தமிழக- ஆந்திர மாநில வனப் பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானை கடந்த சில நாள்களாக போ்ணாம்பட்டு வனச்சரகசத்துக்குள்பட்ட பென்னிமடுகு பகுதியில் முகாமிட்டுள்ளது.
இந்நிலையில் அந்த ஒற்றை யானை புதன்கிழமை அதிகாலை பாஸ்மாா்பெண்டா மலைக் கிராமத்தில் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள ஜனகராஜ் நிலத்தில் புகுந்து,அங்கு பயிரிடப்பட்ட நெல் பயிா், தீவன பயிா்களை சேதப்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
இதைப் பாா்த்த கிராம மக்கள் பட்டாசு வெடித்து, மேளம் அடித்து யானையை விரட்டினா். இதுகுறித்து தகவலறிந்த போ்ணாம்பட்டு வனத் துறையினா் நேரில் சென்று விசாரணைமேற்கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.