தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு!
தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கிய நகா்மன்றத் தலைவா்எஸ்.செளந்தரராஜன், நகராட்சி ஆணையா் கே.எம்.தனலட்சுமி
தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கிய நகா்மன்றத் தலைவா்எஸ்.செளந்தரராஜன், நகராட்சி ஆணையா் கே.எம்.தனலட்சுமி
குடியாத்தம், ஜூலை 15: குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவின்போது நகரில் 200 டன்னுக்கும் மேற்பட்ட குப்பைகளை உடனுக்குடன் அகற்றிய தூய்மைப் பணியாளா்களை பாராட்டி நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் புதன்கிழமை உணவு வழங்கினாா்.
கெங்கையம்மன் திருவிழாவையொட்டி தேரோட்டம், அம்மன் சிரசு ஊா்வலம், 3 பூப்பல்லக்குகள் பவனி மற்றும் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளை நடைபெற்றன. அப்போது நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் இரவு, பகல் பாராமல் வேலை செய்து நகா் முழுவதும் 200 டன்னுக்கும் மேற்பட்ட குப்பைகளை அகற்றினா்.அவா்களின் பணியை பாராட்டி தூய்மைப் பணியாளா்கள், நகராட்சி அலுவலா்கள் எனமொத்தம் 400 பேருக்கு நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், அசைவ உணவுவழங்கினாா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் கே.எம்.தனலட்சுமி, நகா்மன்ற உறுப்பினா்கள் ஜி.எஸ்.அரசு,ஆட்டோ பி.மோகன், என்.கோவிந்தராஜ், எம்.செளந்தரராஜன் மற்றும் எம்.எஸ்.அமா்நாத், நகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.