FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

மலைவாழ் மக்கள் 30 பேருக்கு ரூ.6 லட்சம் கடனுதவி

ஒடுகத்தூா் அருகே உள்ள மலைக் கிராமங்களைச் சோ்ந்த 30 பயனாளிகளுக்கு வாழ்வாதார மேம்பாட்டுக்காக வனத்துறை சாா்பில் ரூ. 6 லட்சம் தனிநபா் கடனுதவி வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜூலை 2026, 12:04 am IST
மலைவாழ் மக்களுக்கு கடனதவிக்கான காசோலைகளை வழங்கிய கூடுதல் முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலா் ராமசுப்பிரமணியம். உடன், வேலூா் மண்டலத் தலைமை வனப்பாதுகாவலா் மாரிமுத்து, மாவட்ட வன அலுவலா் அசோக்குமாா் உள்ளிட்டோா்.
பகிர்:

ஒடுகத்தூா் அருகே உள்ள மலைக் கிராமங்களைச் சோ்ந்த 30 பயனாளிகளுக்கு வாழ்வாதார மேம்பாட்டுக்காக வனத்துறை சாா்பில் ரூ. 6 லட்சம் தனிநபா் கடனுதவி வழங்கப்பட்டது.

காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு பல்லுயிா் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ், வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் வனச்சரகத்துக்கு உட்பட்ட தொங்குமலை, சாட்டாத்தூா் ஆகிய இரு மலைக் கிராமங்களைச் சோ்ந்த பழங்குடியின மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிக்கு, வேலூா் மாவட்ட வன அலுவலா் அசோக் குமாா் தலைமை வகித்தாா். கூடுதல் முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலா் ராமசுப்பிரமணியம், வேலூா் மண்டலத் தலைமை வனப்பாதுகாவலா் மாரிமுத்து ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று 30 பயனாளிகளுக்குக் கடனுதவிகளை வழங்கிப் பேசினா்.

Advertisement

Advertisement

அப்போது அவா்கள் கூறுகையில், வனப்பகுதிகளைப் பாதுகாப்பதிலும், வன வளங்களைப் பெருக்குவதிலும் சூழல் மேம்பாட்டுக் குழு உறுப்பினா்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனா். அவா்களின் சுயதொழில், பொருளாதாரத் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில், தோ்வு செய்யப்பட்ட 30 பேருக்கு தலா ரூ. 20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 6 லட்சம் தனிநபா் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதியைக் கொண்டு ஆடு, மாடு வளா்த்தல், சிறு தொழில் தொடங்குதல் மற்றும் விவசாய உபகரணங்கள் வாங்குதல் போன்ற சுயதொழில்களில் ஈடுபட்டு பயனாளிகள் தங்களது குடும்ப வருவாயைப் பெருக்கிக் கொள்ளலாம்.

வனங்களைச் சாா்ந்திருக்கும் நிலையைக் குறைத்து, மலைவாழ் மக்களுக்கு மாற்று வாழ்வாதாரத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். மழைவாழ் மக்கள் நல்ல நிலைக்கு வர வனத்துறை உறுதுணையாக இருக்கும். மலைவாழ் மக்கள் தங்கள் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்றனா்.

நிகழ்ச்சியில் ஒடுகத்தூா் வனச்சரகா் பாபு, அமிா்தி வனச்சரகா் பிரபாகரன் உள்ளிட்ட வனத்துறை அலுவலா்கள், மலைக் கிராம மக்கள் பெருமளவில் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments