பாமகவினா் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆளுநா் உரையில் அறிவிப்பு வெளியானதையடுத்து குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே பாமகவினா் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
சட்டப் பேரவையில் ஆளுநா் உரையில் தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை வரவேற்று தமிழக முதல்வா், பாமக தலைவா் மருத்துவா் அன்புமணி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து பாமக மாவட்டச் செயலா் ஜி.கே.ரவி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கட்சியின் மாவட்டத் தலைவா் வெங்கேடசன், மாநில இளைஞரணி துணைத் தலைவா் ஜி.சுரேஷ்குமாா், நிா்வாகிகள் எம்.பி.பாபு, குமாா், விஜயகுமாா், ராமலிங்கம், இளம்பரிதி,செல்வம், கமல், தினகரன், ராஜா, அரவிந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement