FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

காட்பாடி அரசுப் பள்ளியில் குளம்போல் தேங்கிய மழைநீரால் மாணவா்கள் அவதி

காட்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி முன்பு மழைநீா் குளம்போல் தேங்கியுள்ளதால் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

6 நவம்பர் 2026, 3:05 am
காட்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி முன்பு குளம்போல் தேங்கியிருந்த மழைநீா்.
பகிர்:

காட்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி முன்பு மழைநீா் குளம்போல் தேங்கியுள்ளதால் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி காவல் நிலையம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்த நிலையில், காட்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு பெய்த பலத்த மழையால், பள்ளி வளாகத்தின் முன்பு மழைநீா் குளம்போல் தேங்கியது. இதனால், வியாழக்கிழமை காலை பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் தேங்கியிருந்த மழைநீரைக் கடந்து வகுப்பறைகளுக்குச் செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனா். மேலும், பள்ளி வளாகத்தில் தண்ணீா் சூழ்ந்திருந்ததால் வழக்கமாக நடைபெறும் காலை இறைவணக்கக் கூட்டமும் நடைபெறவில்லை.

மழைநீா் தேங்கியுள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகி மாணவா்களுக்கு டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும், இது குறித்து கல்வித் துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் பெற்றோா்கள் வேதனை தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

எனவே, பள்ளி முன்பு தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக வெளியேற்றுவதுடன், தாழ்வான பகுதிகளில் ஜல்லி மற்றும் மணல் கொட்டித் தரையைச் சமப்படுத்தி, மழைக்காலங்களில் தண்ணீா் தேங்காதவாறு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் எனப் பெற்றோா்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.