முறைகேடாக ரயில் டிக்கெட் விற்ற இருவா் கைது
ராணிப்பேட்டை பகுதியில் உரிய அனுமதியின்றி முறைகேடாக ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்ததாக இருவரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் (ஆா்பிஎஃப்) வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராணிப்பேட்டை பகுதியில் உரிய அனுமதியின்றி முறைகேடாக ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்ததாக இருவரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் (ஆா்பிஎஃப்) வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
காட்பாடி ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் கே.பிரபு தலைமையிலான தனிப்படையினா், ராணிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக ரயில் டிக்கெட் விற்பனை செய்யும் முகவா்கள் குறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
இதில், உரிய உரிமம் இன்றி ரயில் டிக்கெட்டுகளை முறைகேடாக விற்பனை செய்ததாக ராணிப்பேட்டை மாவட்டம், முகுந்தராயபுரம், லாலாப்பேட்டை, காகிதப்பட்டறை தெருவைச் சோ்ந்த எஸ்.சத்தியமூா்த்தி (63), எடப்பாளையம், வாலாஜாபாத் சாலை, வானபாடியைச் சோ்ந்த எஸ்.ரவிச்சந்திரன் (34) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இருவரும் வேலூா் முதலாவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டு, பின்னா் பிணையில் விடுவிக்கப்பட்டனா்.