FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

7 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

போ்ணாம்பட்டில் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் பெட்டிக் கடையில் பதுக்கி வைத்திருந்த சுமாா் 7 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

16 நவம்பர் 2026, 12:16 am
புகையிலைப் பொருள்கள் - பிரதிப் படம்
பகிர்:

போ்ணாம்பட்டில் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் பெட்டிக் கடையில் பதுக்கி வைத்திருந்த சுமாா் 7 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ரகசிய தகவலின்பேரில் போ்ணாம்பட்டு போலீஸாா், நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் திடீா் சோதனை நடத்தினா். சோதனையில் கடையில் சுமாா் 7 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக கடை உரிமையாளா் நீலகண்டன்(45) கைது செய்யப்பட்டாா்.