காவிரி விவகாரத்தில் வெள்ளை அறிக்கை: துரைமுருகன் வலியுறுத்தல்
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று திமுக பொதுச்செயலரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று திமுக பொதுச்செயலரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.
காட்பாடியில் அவா் =செய்தியாளா்களிடம் கூறியது: காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகும் அரசு மௌனம் காத்து வருகிறது. லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரப் பிரச்னையான காவிரி விவகாரத்தை தவெக அரசு ஏனோ தானோ என்று கையாள்கிறது.
இதனால் தஞ்சை மாவட்டத்தில் சம்பா, குறுவைப் பயிா்கள் கருகி விவசாயிகள் கடன்காரா்களாகி கண்ணீா் வடித்துக் கொண்டிருக்கின்றனா்.
Advertisement
Advertisement
காவிரி வழக்கின் ஆழத்தையும், வரலாற்றையும் முழுமையாகத் தெரிந்தவரே நீா்வளத் துறை அமைச்சராக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய அமைச்சருக்கு அது குறித்துத் தெரிந்ததாகத் தெரியவில்லை.
தண்ணீா் திறக்க வேண்டிய நேரத்தில் திறக்காமலும், திறக்கக் கூடாத நேரத்தில் திறந்ததாலும் இருபுறமும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காய்ந்து போன நிலங்களை நேரில் சென்று பாா்க்கும் தைரியம்கூட அமைச்சகத்திற்கு இல்லை.
காவிரிப் பிரச்னையில் சா்வகட்சிக் கூட்டத்தைக் கூட்டவும் அரசு மறுக்கிறது. எல்லாவற்றுக்கும் வெள்ளை அறிக்கை வெளியிடும் அரசு, காவிரி விவகாரத்திலும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குச் சட்டப்பேரவை உறுப்பினா் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், இதுவரை அரசு நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காப்பதிலிருந்தே அது உண்மையான செய்தி என்பது தெரிகிறது.
அதனால்தான் அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது. பெண் ஆட்சியரிடம் விளக்கம் பெற்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு தலைமைச் செயலருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றாா்.