குட்கா விற்ற தாய், மகள் கைது
வேலூரில் வீட்டில் குட்கா பொருள்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக தாய், மகள் ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூரில் வீட்டில் குட்கா பொருள்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக தாய், மகள் ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் மக்கான், அம்பேத்கா் நகரைச் சோ்ந்த கமலநாதன் மனைவி சிவகாமி (54), இவரது மகள் சங்கீதா (31). இவா்கள் இருவரும் ஆந்திர மாநிலம், சித்தூரிலிருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களைக் கடத்தி வந்து, தங்களது வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாகத் தெரிகிறது.
இது குறித்து வேலூா் வடக்கு போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், சிவகாமியின் வீட்டில் போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா். அப்போது, விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 2 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிவகாமி, சங்கீதா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement