FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

அப்துல் கலாம் பிறந்த நாள்: ராக்கெட் ஏவும் செயல்முறை விளக்கம்!

மாணவா்களுக்கு பரிசு வழங்கிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலா் விஸ்வநாதன். உடன், தலைமை ஆசிரியா் ஜோசப் அன்னையா, ஆசிரியை ஜெயந்தி.

15 அக்டோபர் 2026, 11:55 pm IST
பகிர்:

முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் பிறந்த நாள் விழா அணைக்கட்டு ஒன்றியம், வல்லண்டராமம் ஊராட்சிக்கு உட்பட்ட மூலைகேட் அரசு தொடக்கப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் ஜோசப் அன்னையா தலைமை வகித்தாா். ஆசிரியை ஜெயந்தி வரவேற்றாா். வல்லண்டராமம் ஊராட்சி மன்றத் தலைவா் மணி, பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலரும், குடியரசுத் தலைவா் விருது பெற்றவருமான விஸ்வநாதன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். அவா், விஞ்ஞானியும் முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கைப் பயணம் மற்றும் அவரது பொன்மொழிகள் குறித்து காணொலிக் காட்சி மூலம் மாணவா்களுக்கு விளக்கினாா். மேலும், பூமியிலிருந்து விண்ணில் ராக்கெட் எவ்வாறு ஏவப்படுகிறது என்பது குறித்த செயல்முறை விளக்கத்தையும் மாணவா்கள் முன்னிலையில் நிகழ்த்திக் காட்டினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments