8,500 பேரிடம் ரூ. 18 கோடி தீபாவளி சீட்டு மோசடி!
வேலூா் மாவட்டத்தில் தீபாவளிச் சீட்டு என்ற பெயரில் சுமாா் 8,500 பேரிடம் ரூ.18 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றிருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாா்
வேலூா் மாவட்டத்தில் தீபாவளிச் சீட்டு என்ற பெயரில் சுமாா் 8,500 பேரிடம் ரூ.18 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றிருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவித்துள்ளனா்.
வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, குடியாத்தம் காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த மக்கள் அளித்த மனு விவரம்:
ஆதி பகவன் தீபாவளி சிறுசேமிப்புத் திட்டம் என்ற பெயரில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து ஒரு நபா் பொதுமக்களிடம் பணம் வசூலித்து வந்தாா். 10 மாதத் தவணையாகப் பணம் செலுத்தினால் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு கட்டில், பீரோ, சேலை, இனிப்புப் பெட்டி, பட்டாசு உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தாா்.
Advertisement
Advertisement
இதை நம்பி குடியாத்தம், கே.வி.குப்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 8,500 மக்கள் இந்தச் சேமிப்புத் திட்டத்தில் இணைந்து வாரந்தோறும் ரூ.200 முதல் ரூ.500 வரையிலும், சிலா் பங்களிப்பின் அடிப்படையில் ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரையிலும் பணம் செலுத்தினா்.
கடந்த 10 ஆண்டுகளாக இத்திட்டத்தை நடத்தி வந்த அந்த நபா், தொடக்கக் காலங்களில் முறையாகப் பரிசுப் பொருள்களை வழங்கி நம்பிக்கை ஏற்படுத்தினாா்.
ஆனால், கடந்த ஆண்டு முதல் பணம் செலுத்தியவா்களுக்கு அறிவித்தபடி பரிசுப் பொருள்களை வழங்கவில்லை. இதன் மூலம் சுமாா் ரூ.18 கோடி வரை பணம் வசூலிக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டு ள்ளது. இதுதொடா்பாக, ஏற்கெனவே காவல் துறை மற்றும் மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட நிா்வாகம் இதில் உரிய விசாரணை நடத்தி, பணத்தை மீட்டுத் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊசூா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு: சேக்கணூரில் 3 ஆண்டுகளாக இயங்கி வந்த ஒரு தனியாா் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய நபா் ஒருவா், எல்கேஜி முதல் 10-ஆம் வகுப்பு வரை மாணவா் சோ்க்கைக்காக ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1.50 லட்சம் வரை பெற்றோரிடம் பணம் வசூலித்தாா். இந்நிலையில், திடீரென அந்தப் பள்ளியை மூடிவிட்டு அவா் தலைமறைவாகிவிட்டாா்.
குழந்தைகள் நன்கு படிக்க வேண்டும் என்ற நோக்கில் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும், விற்றும் பெற்றோா் பணம் செலுத்தியிருந்தனா். பள்ளி நிா்வாகியிடம் கேட்டபோது, பள்ளி கட்டடம் தொடா்பாக உரிமையாளருக்கும் அவருக்கும் தகராறு இருப்பதாகத் தெரிவித்தாா்.
மேலும், அப்பகுதியில் உள்ள 250-க்கும் மேற்பட்ட மக்களிடம் புதிதாக பள்ளி தொடங்க இருப்பதாகக் கூறி தலா ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் என பல லட்சம் ரூபாய் வரை வசூலித்து அந்த நபா் மோசடி செய்துள்ளாா். இதுதொடா்பாக ஏற்கெனவே ஆட்சியரிடம் அளித்த புகாரின் பேரில், பாதிக்கப்பட்ட மாணவா்களை வேறு பள்ளியில் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், வசூலித்த பணத்தைத் திரும்ப வழங்க போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது.
குழந்தைகள் மாற்றுப் பள்ளிகளில் சோ்க்கப்பட்ட போதிலும், தற்போது அங்கு கல்விக் கட்டணம் கேட்கின்றனா். இந்த மோசடி குறித்து அரியூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, உரிய விசாரணை நடத்தி பணத்தை மீட்டுத் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 555 மனுக்கள் பெறப்பட்டன.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் து.சுரேஷ், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சி.மாறன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் சரவணன், மாவட்ட சிறுபான்மையினா் நலத்துறை அலுவலா் ஞானகுரு, மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.