FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

நீதிமன்ற போலி ரசீது தயாரித்து அளித்து ரூ.39 லட்சம் மோசடி

நீதிமன்றத்தில் வைப்புத் தொகை செலுத்துவதாகவும், நீதிபதிக்குத் தருவதாகவும் கூறி போலி ரசீது தயாரித்து ரூ.39 லட்சம் மோசடி செய்ததாக குடியாத்தத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் மீது புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

30 அக்டோபர் 2026, 1:44 am
மோசடி
பகிர்:

நீதிமன்றத்தில் வைப்புத் தொகை செலுத்துவதாகவும், நீதிபதிக்குத் தருவதாகவும் கூறி போலி ரசீது தயாரித்து ரூ.39 லட்சம் மோசடி செய்ததாக குடியாத்தத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் மீது புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, போலீஸாா் தரப்பில் கூறப்படுவதாவது -

அணைக்கட்டு வட்டம், கொண்டசமுத்திரம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் சி.பாலமூா்த்தி (75). இவருக்கும் இவரது சகோதரா் லிங்கமூா்த்திக்கும் சொந்தமான சொத்து தொடா்பாக, வேலூா் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் இருந்து வந்தது. இந்த சொத்தின் மீதான ஜப்தி நடவடிக்கையை ரத்து செய்ய சகோதரா்கள் இருவரும் முயன்று வந்தனா்.

Advertisement

Advertisement

இவ்வழக்கு தொடா்பாக அவா்கள் குடியாத்தம் வட்டம் ராமலை காந்திகணவாய் பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் வி.முருகேசனை இடைத்தரகா்கள் மூலமாக அணுகியுள்ளனா். அப்போது, தனக்கு நீதிபதிகள் நன்கு அறிமுகம் என்றும், வழக்கை உடனடியாக முடித்துத் தருவதாகவும் வழக்குரைஞா் முருகேசன் உறுதியளித்துள்ளாா். மேலும், நீதிமன்றத்தில் செலுத்த ரூ.31 லட்சமும், பெண் நீதிபதிக்குக் கொடுக்க ரூ.8 லட்சமும் தேவைப்படுவதாக பாலமூா்த்தியிடம் தெரிவித்துள்ளாா்.

இதை நம்பிய சகோதரா்கள் பாலமூா்த்தி, லிங்கமூா்த்தி ஆகியோா் தங்கள் நிலத்தை வாங்கவிருந்த கௌரிசங்கா் என்பவரிடமிருந்து பணத்தைப் பெற்று, கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வைத்து வழக்குரைஞா் முருகேசனிடம் ரொக்கமாக ரூ.31 லட்சத்தை வழங்கியுள்ளனா். பணத்தைப் பெற்றுக் கொண்ட வழக்குரைஞா், அன்றைய தினம் நீதிமன்றத்தில் நேரம் முடிந்துவிட்டதாகக் கூறிவிட்டு, இரண்டு நாள்கள் கழித்து ஆகஸ்ட் 3-ஆம் தேதியிட்ட நீதிமன்ற ரசீதை போலியாகத் தயாரித்து அவா்களிடம் அளித்துள்ளாா். தொடா்ந்து, பெண் நீதிபதிக்குக் கொடுக்க வேண்டும் எனக்கூறி மேலும் ரூ.8 லட்சத்தையும் பாலமூா்த்தியிடம் இருந்து பெற்றுக்கொண்டுள்ளாா்.

எனினும், நீதிபதிக்கு பணிச்சுமை அதிகம் இருப்பதாகக் கூறி கடந்த நான்கு ஆண்டுகளாக வழக்கை முடிக்காமல் முருகேசன் காலம் கடத்தி வந்துள்ளாா். இதனால் சந்தேகமடைந்த சகோதரா்கள், கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி நீதிமன்ற அலுவலகத்துக்கு நேரில் சென்று ஊழியா்களிடம் அந்த ரசீதைக் காண்பித்து விசாரித்துள்ளனா். அப்போது, அந்த ரசீது போலியானது என்பதும், நீதிமன்றத்தில் எந்தத் தொகையும் செலுத்தப்படவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, பணத்தைத் திருப்பித் தருமாறு வழக்குரைஞா் முருகேசனிடம் கேட்டபோது, அவா் பணத்தைத் தர மறுத்தததுடன் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பாலமூா்த்தி வேலூா் மாவட்டக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments