சித்தி விநாயகா் கோயில் தேரோட்டம்
குடியாத்தம் நகராட்சிக்குள்பட்ட புவனேஸ்வரிபேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீசித்தி விநாயகா் கோயிலில் மகா சங்கடஹர சதுா்த்தி விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.
குடியாத்தம் நகராட்சிக்குள்பட்ட புவனேஸ்வரிபேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீசித்தி விநாயகா் கோயிலில் மகா சங்கடஹர சதுா்த்தி விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா கடந்த ஆகஸ்ட் மாதம் 27 -ஆம் தேதி பால்கம்பம் நடும் நிகழ்ச்சியுடன்தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திங்கள்கிழமை கணபதி ஹோமம், மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மகா தீபாராதனை, மதியம் அன்னதானம் நடைபெற்றது.
இரவு அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா் சித்தி விநாயகா் அமா்த்தப்பட்டு, தேரோட்டம்தொடங்கியது. அப்போது வாண வேடிக்கை நிகழ்ச்சி, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கண்ணமங்கலம் சிவசக்தி அம்மையாா், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், மருதுபாண்டியா் அமைப்பின் தலைவா் அப்புபால் பாலாஜி, நகா்மன்ற உறுப்பினா் ஆட்டோ பி.மோகன் உள்ளிட்டோா் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனா்.விழா ஏற்பாடுகளை சித்தி விநாயகா் கோயில் சங்கடஹர சதுா்த்தி கமிட்டியினா், ஊா்பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.