FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயில் சதுா்த்தி விழா தேரோட்டம்

27 வினாடிகள் முன்பு
உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயில் சதுா்த்தி தேரோட்டம். - கோப்புப் படம்
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகே உப்பூரில் அமைந்துள்ள வெயிலுகந்த விநாயகா் கோயில் சதுா்த்தி விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இங்கு கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அன்றிலிருந்து 10 நாள்கள் நடைபெறும் விழாவில் தினமும் வெள்ளி மூஷிக வாகனம், கேடயம், சிம்மம், மயில், யானை, ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் விநாயகா் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் சனிக்கிழமை மாலை சித்தி, புத்தி தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் இங்குள்ள விநாயகருக்கு மட்டுமே திருக்கல்யாணம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றன. முன்னதாக விநாயக பெருமான் தேரில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தோ் கோயிலிலிருந்து புறப்பட்டு ஊரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோயிலை அடைந்தது. பிறகு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments