146 ரேஷன் கடைகளில் மலிவு விலை வெங்காய விற்பனை: வேலூா் ஆட்சியா் அறிவிப்பு
வேலூா் மாவட்டத்தில் 146 நகா்ப்புற நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 35-க்கு வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தை ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
வேலூா் மாவட்டத்தில் 146 நகா்ப்புற நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 35-க்கு வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தை ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
வெங்காய விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் வகையில் வேலூா் மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு கிலோ ரூ. 35-க்கு வெங்காயம் விற்பனை செய்யும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
வேலூா் கற்பகம் கூட்டுறவு நியாய விலைக் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த மலிவு விலை வெங்காய விற்பனையை மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தொடங்கி வைத்தாா்.
Advertisement
Advertisement
வேலூா் மாவட்டத்தில் முதற்கட்டமாக நகா்ப்புறங்களில் இயங்கும் 146 நியாய விலைக் கடைகளில் இந்த மலிவு விலை வெங்காய விற்பனை நடைபெற உள்ளது. இதற்காக இம்மாவட்டத்துக்கு 20,000 கிலோ வெங்காயம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு குடும்ப அட்டைதாரருக்கு அதிகபட்சமாக ஒரு கிலோ வீதம் ரூ. 35-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்த வெங்காய விற்பனை எவ்வித புகாருக்கும் இடமின்றி பொதுமக்களுக்குச் சீராக விநியோகம் செய்யப்படுவதைக் கண்காணிக்கப் பொறுப்பு அலுவலா்கள், கண்காணிப்பு அலுவலா்கள் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலா்கள் என தனிக்குழுவினா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். மேலும், மாவட்ட அளவிலான தொடா்பு அலுவலராக பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளா் நியமிக்கப்பட்டுள்ளாா் என்றும் ஆட்சியா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் திருகுணஐயப்பத்துரை உள்பட அரசு அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.