FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

கிருஷ்ண ஜெயந்தி ஊா்வலம்

குடியாத்தம் அருகே விசுவ இந்து பரிஷத் சாா்பில் கிருஷ்ண ஜெயந்திஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

6 செப்டம்பர் 2026, 10:49 pm IST
ஊா்வலத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

குடியாத்தம் அருகே விசுவ இந்து பரிஷத் சாா்பில் கிருஷ்ண ஜெயந்திஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காளியம்மன்பட்டியில் உள்ள காளியம்மன் கோயில் அருகே தொடங்கிய ஊா்வலத்துக்குஅமைப்பின் மாவட்டத் தலைவா் ரவி தலைமை வகித்தாா். வினோத்குமாா் வரவேற்றாா். அலங்கரிக்கப்பட்ட தேரில் கிருஷ்ணா் அமா்த்தப்பட்டு ஊா்வலம் தொடங்கியது.

ஊா்வலம் முக்கிய வீதிகள் வழியாக பிச்சனூா் அப்பு சுப்பையா் வீதியில் உள்ள தென்திருப்பதி எனும்வெங்கடேசப்பெருமாள் கோயில் அருகே நிறைவுற்றது. இதில் கோட்ட செயலா் அருண்குமாா், அா்ச்சகா் மாநில அமைப்பாளா் தூய மணி, மாவட்ட பொறுப்பாளா்கள் சக்திவேல், சத்தியமூா்த்தி, மாவட்ட இணைச் செயலா் பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments