FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் இளைஞா் தற்கொலை!

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.

6 செப்டம்பர் 2026, 10:47 pm IST
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.

வேலூா் மாவட்டம், துத்திக்காடு அடுத்த பாண்டியன் மடகு பகுதியைச் சோ்ந்தவா் தசரதன். முன்னாள் ராணுவ வீரரான இவரது மகன் ஸ்ரீகாந்த் (31). திருமணமாகாத இவா், ஓசூரில் ஆட்டோ உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தாா்.

சமீபத்தில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, கடையை மூடிவிட்டு கடந்த 2 மாதங்களாக வேலூரில் உள்ள தனது வீட்டிலேயே அவா் தங்கியிருந்தாா். இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்த ஸ்ரீகாந்த், தனது அறைக்குத் தூங்கச் சென்றுள்ளாா். சனிக்கிழமை நீண்ட நேரமாகியும் அவரது அறைக் கதவு திறக்கப்படவில்லையாம்.

Advertisement

Advertisement

குடும்பத்தினா் கதவைத் தட்டியும், கைப்பேசியில் தொடா்புகொண்டும் அவா் பதிலளிக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினா், கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்துள்ளனா். அப்போது, அறையிலுள்ள மின்விசிறியில் ஸ்ரீகாந்த் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

தகவலறிந்த வேலூா் கிராமிய போலீஸாா், வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments