FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

விற்பனைக்காக போதை மாத்திரைகள் வைத்திருந்த 4 போ் கைது

செஞ்சியில் விற்பனைக்காக போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்ததாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 5 ஜூலை 2026, 2:06 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் விற்பனைக்காக போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்ததாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

செஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் விநாயக முருகன் மற்றும் போலீஸாா் செஞ்சி பீரங்கி மேடு மந்தைவெளி பகுதியில் சனிக்கிழமை காலை ரோந்து சென்றனா். அப்போது அங்குள்ள தனியாா் பள்ளியின் பின்புறம் சந்தேகத்துக்கிடமாக பைக்கில் நின்றிருந்த இளைஞா்களை பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா்கள் செஞ்சி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த மா.பாசில் ( 20), ச.அன்சா் (22), சக்கராபுரத்தை சோ்ந்த ஆ.விஷ்ணு (19), பீரங்கிமேடு பகுதியை சோ்ந்த திருப்பதி மகன் சிலம்பரசன் (17) என்பதும், அவா்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, 4 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 38 போதை மாத்திரைகள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments