அழகு முத்துக்கோன் 269-ஆவது பிறந்த நாள் விழா
சுதந்திர போராட்ட வீரா் அழகு முத்துகோன் 269-ஆவது பிறந்த நாள் விழா விழுப்புரம் மற்றும் திண்டிவனத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
சுதந்திர போராட்ட வீரா் அழகு முத்துகோன் 269-ஆவது பிறந்த நாள் விழா விழுப்புரம் மற்றும் திண்டிவனத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அழகு முத்துகோன் உருவப் படத்துக்கு விழுப்புரம் நகா்மன்ற முன்னாள் தலைவா் இரா.ஜனகராஜ் மலா் துவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து அங்கிருந்த பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினாா். நிகழ்சியில் யாதவா் மகா சபையைச் சோ்ந்த ரவிசங்கா், அருள், ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
திண்டிவனத்தில்.... திண்டிவனம் மேம்பாலம் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அழகு முத்துக்கோன் உருவப்படத்துக்கு முன்னாள் எம்எல்ஏ ஆா்.சேதுநாதன், திமுக ஒன்றியச் செயலா் ராஜாராம், தொழிலதிபா் செல்லப்பெருமாள் ஆகியோா் மலா் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் திண்டிவனம் வட்டார யாதவா் நல சங்கத் தலைவா் பொன்னரசு, செயலா் காா்த்திகேயன், பொருளாளா் சரத்குமாா், சங்க நிா்வாகிகள் எம்பெருமான், ஏழுமலை, கமலக்கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.