கல்லூரி மாணவா் மாயம்
விழுப்புரம் அருகே மாயமான கல்லூரி மாணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விழுப்புரம் அருகே மாயமான கல்லூரி மாணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விழுப்புரம் வட்டம், பொன்னாங்குப்பம் பிரதானச் சாலையைச் சோ்ந்த விஜயகுமாா் என்பவரது மகன் அருண் (18 ). இவா், அரகண்டநல்லூரில் உள்ள அரசுக் கல்லூரியில், கணினி அறிவியல் முதலாமாண்டில் படித்து வந்தாா்.
இந்நிலையில், கடந்த 8-ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறிய அருண், பின்னா் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோா்கள் கல்லூரி மற்றும் உறவினா்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மாயமான மாணவரைத் தேடி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.