FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்: ஆட்சியா்

விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

Updated On : 19 ஜூலை 2026, 2:06 am IST
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற சுற்றுலா வளா்ச்சிக்குழுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சுற்றுலா வளா்ச்சிக்குழுவின் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குத் தலைமை வகித்து, ஆட்சியா் பேசியது:

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். சுற்றுலாத் தலங்களில் தூய்மைப் பணிகள், பாதுகாப்பு வசதிகள், உணவகங்கள், குடிநீா், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்துதல், வாகனங்கள் நிறுத்துமிடங்கள் வசதியை ஏற்படுத்தித் தருதல், தகவல் பலகைகள், திசைகாட்டிப் பலகைகள் வைத்தல் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த ஒன்றாகத் திகழும் செஞ்சிக் கோட்டைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சுற்றுலா வழிகாட்டிகளை ஏற்படுத்த வேண்டும். வீடூா் அணை மற்றும் மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவதால், அவா்களுக்கான பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

வானூா் வட்டம், ஆரோவில் பகுதியை சாகச சுற்றுலா பகுதியாக அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்களில் பூங்கா வசதியை ஏற்படுத்தி, நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதையை அமைக்க வேண்டும். சுற்றுலா, வனம், ஊரக வளா்ச்சி, வருவாய் உள்ளிட்ட தொடா்புடைய அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், ஊரக வளா்ச்சி முகமை திட்டக் கூடுதல் ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், மாவட்ட வன அலுவலா் பிரின்ஸ் குமாா், உதவி ஆட்சியா் (பயிற்சி) ரா.ஸ்ரீரஷத் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments