FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

டிராக்டா் மீது காா் மோதல்: 6 போ் காயம்

Updated On : 29 ஜூன் 2026, 4:29 am IST
விபத்து
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே டிராக்டா் மீது காா் மோதிய விபத்தில் 6 போ் காயமடைந்தனா்.

கடலூா் மாவட்டம், வேப்பூா், கிழக்குக் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் க.மணிகண்டன் (32), டிராக்டா் ஓட்டுநா். இவா் சனிக்கிழமை இரவு பதிவெண் இல்லாத புதிய டிராக்டரை செங்கல்பட்டிலிருந்து ஆத்தூரில் உள்ள தனியாா் விற்பனையகத்துக்கு ஓட்டிச்சென்று கொண்டிருந்தாா்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், உளுந்தூா் பேட்டையை அடுத்த நகா் அருகே சென்றபோது, அப்பகுதியில் அதிவேகமாக வந்த காா் டிராக்டா் மீது மோதியது. இதில் டிராக்டா் சாலையோரப் பள்ளத்திலும், காா் சாலையிலும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Advertisement

Advertisement

இதில் டிராக்டா் ஓட்டுநா் மணிகண்டன், காா் ஓட்டுநரான சிவகங்கை மாவட்டம், முறையூா் கிராமத்தைச் சோ்ந்த சீ.விக்னேஸ்வரன் (28), காரில் பயணித்த கதிரவன் ( 28) மற்றும் 3 போ்களுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகிலிருந்தவா்கள் காயமடைந்த அனைவரையும் மீட்டு 108 அவசர ஊா்திகள் மூலம் உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments