தத்து கொடுப்பு நிறுவனத்திடம் குழந்தை ஒப்படைப்பு
தொட்டில் குழந்தைத் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்த பெண் குழந்தை தனியார் தத்து கொடுப்பு நிறுவனத்திடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
தொட்டில் குழந்தைத் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்த பெண் குழந்தை தனியார் தத்து கொடுப்பு நிறுவனத்திடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் பிரசவிக்கப்பட்ட பெண் குழந்தையை, அவரது தாயார் விட்டு, விட்டு தலைமறைவானார். எடை குறைவாக இருந்த அக்குழந்தை அதே மருத்துவமனையில் 4 மாதங்களாகப் பராமரிக்கப்பட்டு, பின்னர் தொட்டில் குழந்தைத் திட்டத்தில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிப்.29ஆம் தேதி சேர்க்கப்பட்டது.
குழந்தை நல்ல நிலையில் இருப்பதைத் தொடர்ந்து, உள்நாட்டு தத்துக் கொடுக்கும் நிறுவனமான, சென்னை மணப்பாக்கத்தைச் சேர்ந்த கிரிஸ்ட் பெய்த்து கோம் என்ற நிறுவனத்துக்கு குழந்தையை வழங்கிட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி வியாழக்கிழமை ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் அக்குழந்தையை தத்துகொடுக்கும் நிறுவனத்திடம் வழங்கினார். மேலும், அக்குழந்தைக்கு ஐஸ்வர்யா என்று பெயர் வைத்தார்.
Advertisement
Advertisement
அப்போது மாவட்ட சமூக நல அலுவலர் ச.மீனா, மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் ஜெயந்தி ரவிச்சந்திரன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதேபோல், மாவட்டத்தில் 1999ஆம் ஆண்டு முதல் இதுவரை 122 குழந்தைகள் மீட்கப்பட்டு, தத்து கொடுக்கும் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.