தொழில் முனைவோர் கருத்தரங்கம்
வடலூரில் தொழில் முனைவோருக்கான ஒரு நாள் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வடலூரில் தொழில் முனைவோருக்கான ஒரு நாள் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையம் சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்குக்கு, வடலூர் சிட்கோ சங்கத் தலைவர் கலையரசன் தலைமை வகித்தார். செயலர் முருகன், மணிக்கண்ணன் முன்னிலை வகித்தனர். பஞ்சநாதன் வரவேற்றார். கிறிஸ்துராஜ், ரவிச்சந்திரன், ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தொழில் முனைவோர் உற்பத்தி செய்யும் பொருள்களை சந்தைப்படுத்துதல், அரசின் மானியத் திட்டங்கள், நிறுவனத் தரச்சான்று, கண்காட்சியில் பங்கேற்பது குறித்து மத்திய அரசின் தொழில் நிலைய உதவி இயக்குநர் சிவலிங்கம் விளக்கம் அளித்தார். மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்த படம் திரையிடப்பட்டு, தொழில் முனைவோர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. விஜயராகவன் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.