FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

என்.எல்.சி.யின் லாபத்தில் 2 சதவீதத்தை மாவட்ட வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும்: ஆட்சியர் வலியுறுத்தல்

என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தனது லாபத்தின் 2 சதவீதத்தை கடலூர் மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என ஆட்சியர் வே.ப.தண்டபாணி வலியுறுத்தினார்.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 8:56 am IST
பகிர்:

என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தனது லாபத்தின் 2 சதவீதத்தை கடலூர் மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என ஆட்சியர் வே.ப.தண்டபாணி வலியுறுத்தினார்.
 கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தற்போது 5,240 மெகாவாட் மின் உற்பத்தி செய்து வருகிறது. இதற்காக ஆண்டுக்கு 3.91 கோடி டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. நிறுவனத்தின் வருவாய் ரூ. 8,496 கோடியாக உள்ளது. இந்த நிறுவனம் தனது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ், செலவிட வேண்டும். இந்தத் தொகையை கடலூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டுமென பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
 இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தனது லாபத்தில் 2 சதவீதத்தை மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிக்கே செலவிட வேண்டும் என விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, அந்த நிறுவனத்துக்கு விரைவில் கடிதம் எழுதவுள்ளேன்.
 நிறுவனத்தின் மின் உற்பத்திக்கான நிலக்கரி முழுவதும் கடலூர் மாவட்டத்திலேயேதான் வெட்டி எடுக்கப்படுகின்றன. எனவே, சமூகப் பொறுப்புணர்வுத் திட்ட நிதியான 2 சதவீதத்தை மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகளுக்குச் செலவிட வேண்டும். அதுவும் மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்கும் பணிகளையே செய்ய வேண்டும்.
 என்.எல்.சி.யிலிருந்து வெளியேற்றப்படும் நீர் பரவனாற்றில் விடப்பட்டு வாலாஜா ஏரிக்கும், அங்கிருந்து பெருமாள் ஏரிக்கும் அனுப்பப்படுகிறது. இந்த நீரில் அதிகமான அளவு கரித்துகள் படிந்திருப்பதால் நீரை நேரடியாகப் பயன்படுத்த முடியவில்லை. எனவே, 100 மீட்டருக்கு ஒரு தடுப்பு அமைக்க வேண்டும். இதனால், கரித்துகள் ஒவ்வொரு தடுப்புகளிலும் படிந்து ஏரிக்கு நன்னீராக வரும்.
 இதற்கான செலவினத்தை என்.எல்.சி.யின் திட்ட மதிப்பீட்டிலிருந்தே செலவிட வேண்டும். இந்த பிரச்னைகள் தொடர்பாக என்.எல்.சி. இந்தியா நிறுவனத் தலைவருக்கு கடிதம் எழுதி நிதியைப் பெற முயற்சிப்பேன் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments