FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நீர்தேக்கப் பகுதியில் அமைச்சர் ஆய்வு

நெய்வேலி பகுதியில் உள்ள வேலங்குளம் மாநில எண்ணெய் வித்து பண்ணை, மத்திய ஆராய்ச்சிக் கழகம் உள்ளிட்ட இடங்களில் பருவ மழைக் காலங்களில் மழை நீரை சேமிப்பதற்காக அமைக்கப்படவுள்ள நீர்தேக்க

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

நெய்வேலி பகுதியில் உள்ள வேலங்குளம் மாநில எண்ணெய் வித்து பண்ணை, மத்திய ஆராய்ச்சிக் கழகம் உள்ளிட்ட இடங்களில் பருவ மழைக் காலங்களில் மழை நீரை சேமிப்பதற்காக அமைக்கப்படவுள்ள நீர்தேக்க இடங்களை அமைச்சர் எம்.சி.சம்பத் ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 பின்னர், காடாம்புலியூர் ராஜகணபதி நகரில் சிட்கோ தொழில்பேட்டை அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, அங்குள்ள நல்லான்குளம், கூனங்குளம் ஆகியவற்றை பார்வையிட்டார். இந்தக் குளங்களை ஆழப்படுத்தி நீர்வரத்து வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என்றும், குளத்தில் சுற்றுச்சுவர் அமைத்து, நடைபாதை, பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணியிடம் அமைச்சர் கூறினார்.
 அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, வட்டாசியர்கள் விஜயா (குறிஞ்சிப்பாடி), ஆறுமுகம் (பண்ருட்டி) மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments